லங்கைமான் மக்களிடம் இணையதளங்களில் முறைகேடுகள் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினர் ஒலிபெருக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இணையத்தின் மூலம் பல்வேறு முறைகேடுகள் புதிய புதிய வகைகளை தினந்தோறும், அதனை அடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில முழுவதும் சைபர் கிரைம் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அப்போது இணையதளங்களில் வரும் அரசு வேலை உட்பட பல்வேறு கவர்ச்சி விளம்பரங்களை நம்பி ஏமாறக்கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் செலுத்தக் கூடாது, சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும், ஆன்லைன் மூலம் பணம் இரட்டிப்பு என்பதை நம்பி பணம் செலுத்த வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை பொது மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், வலங்கைமான் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆலங்குடி, ஆவூர், கோவிந்தகுடி மற்றும் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் வலங்கைமான் காவல்துறையினர் இணையதளங்கள் மூலம் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கியின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் சந்தான மேரி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு பிரச்சார பணியில் வலங்கைமான் காவல்துறையினர் தனசேகரன் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.