நன்னிலம் தொகுதி குடவாசலில் புதிய பால் குளிரூட்டும் நிலையமும், கால்நடை வளர்ப்புக்கு மானியத்துடன் கூடய கடன் வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் நன்னிலம் தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் கோரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் பேசியதாவது, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நன்னிலம், குடவாசல் பகுதி மக்கள் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
100 க்கும் அதிகமான ஊராட்சிகளில் வாழும் மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு பசு மாடு வளர்த்து தினந்தோறும் சுமார் 15 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றனர்.
தனியார் நிறுவனமும் 3 ஆயிரம் லிட்டர் வரையிலும், ஆவின் மூலம் 300 லிட்டர் வரையில் மட்டுமே கொள்முதல் செய்கிறது.
கால்நடை தொழிலை நம்பியிருக்கும் கால்நடை விவசாயிகள் பயன்பெறும் வகையில், குடவாசலை தலைமை இடமாகக் கொண்டு புதிய பால் குளிரூட்டு நிலையம் அமைத்துக் கொடுத்தால் அதன் மூலம் கால்நடை விவசாயிகள் நன்கு பயனடைவார்கள். என்றும் அவர் கோரிக்கை கோரிக்கை வைத்தார்.
மேலும், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் கால்நடை விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்கும் தேவையான மானியத்துடன் கூடிய கடனை பால்வளத்துறை மூலம் வழங்கி அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ பேசினார்.