பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,ராஜகிரி காமராஜர் நகரை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்கிட வேண்டி விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் அவர்கள் தலைமையில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்ட போது விடுதலை தமிழ் புலி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வழக்கறிஞர் தீபன்,பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ்மாறன், குடந்தை ஒன்றிய செயலாளர் மு.முரளி ஆகியோர் உள்ளனர்.