அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் தனிச்சியம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மண்டல செயற்குழு வெங்கிடசுப்பிரமணியன், தலைமை தாங்கினார் கிளைத் தலைவர்சபரிகணேசன், சபரிமுத்து, ஆகியோர் முன்னில வைத்தனர்.
ஒன்றிய பொதுச் செயலாளர் கணேசன், வரவேற்பு உரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் 10 ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி தலைமையிலான அரசின் மகத்தான திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்போம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட கழக தலைமை என்ன வேலை நமக்கு வழங்குகிறதோ அதை சிறப்பாக செய்து தேனி பாராளுமன்றத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்படுபவரை மகத்தான வெற்றி பெற வைப்பது மீண்டும் மோடி வேண்டுமோடி என்று கோஷம் எழுப்பினர் இதில் பிரச்சாரப் பிரிவு மாநில செயலாளர் புதூர் ராஜா, சோழவந்தான் தொகுதி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தமூர்த்தி,
தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் ராம்தாஸ், மாவட்ட பிரச்சார பிரிவு செந்தாமரைகண்ணன், மாவட்டச் செயலாளர்கள் ரவிசங்கர், ஜெயபாண்டி, ஒன்றிய தலைவர் இருளப்பன், ஒன்றிய பொருளாளர் ஆசைத்தம்பி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார்..