சிறுவாலை ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தினை ரவீந்திரநாத் எம்பி திறந்து வைத்தார்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சிறுவாலை ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மேம்பாட்டு தொகுதி திட்டம் 2021- 2022 ஆண்டுக்கான25.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தினை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள்ராஜு, மதுரை மேற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சோனாப்ரியா, ஓபிஎஸ் அணி வடக்கு மாவட்ட செயலாளர்முருகேசன், மாநில இளைஞர் அணி செயலாளர்ராஜ்மோகன், மாவட்ட அவைத்தலைவர் தனபாலன், மாவட்ட பொருளாளர் தூதிதிருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிமுருகன்,சேதுசீனிவாசன், கழக ஊராட்சி செயலாளர் பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் முருகேசன், நகரிமூர்த்தி, சிறுவாலைசெல்வம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *