காரைக்குடி அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கோபுரகலசம் அருகே நின்று நடிகைகள் வழிபாடு. ஆகம விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் குலதெய்வ கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தனது மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி மற்றும் குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கோயில் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றும் போது சரத்குமார் மனைவி மற்றும் மகளுடன் கோயில் விமானத்தில் ஏறி தரிசனம் செய்தார்.

ராதிகா மற்றும் வரலட்சுமி கோயில் விமானத்தில் ஏறி கலசம் அருகே நின்று வழிபாடு நடத்தியது பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. என்னதான் பிரபலமான நடிகைகளாக இருந்தாலும் ஆகம விதிப்படி நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சியில் நடிகை களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *