திருவாரூர் வட்டம் பழையவலம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அடிக்கல் நாட்டு விழா


திருவாரூர் வட்டம் பழையவலம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 62.50 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் உடனிருந்தார் நிகழ்விற்கு முன்னதாக திருவாரூர் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாகும் நகராட்சியின் மொத்த பரப்பளவு 10.47 ச.கி.மீ ஆகும் 30 வார்டுகளை உள்ளடக்கியது திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டது அதன்படி திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தும் பணிக்கு 2023-2024 திட்டத்தின் கீழ் 39.61 கோடி மதிப்பீட்டிற்கு தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டுள்ளது

கழிவு நீர் நீரேற்று நிலையம் 29.97 கி.மீ கழிவுநீர் கடத்து குழாய், 1043 எண்ணிக்கைகளில் கழிவுநீர் இணைப்பு தொட்டிகள் 5334 எண்ணிக்கைகளில் வீட்டு இணைப்புகளுக்கு, 593. எண்ணிக்கைகளில் வீட்டு இணைப்புகளுக்கு உள்ளிட்ட 5927 எண்ணிக்கைகளில் நடைபெறவுள்ள பணிக்கு திருவாரூர் சிவம் நகரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார்

நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா திருவாரூர் ஒன்றியக்குழுத்தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தியாகராஜன் திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் இரா சங்கர் பணிநியமன குழு உறுப்பினர் வாரி பிரகாஷ் நகராட்சி ஆணையர் பிரபாகரன் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் எஸ் என் அசோகன் வரதராஜன் ரஜினி சின்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *