வலங்கைமானில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்பரை நிகழ்ச்சியும், தமிழ்நாடு முதலமைச்சரின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக எல் இ டி திரையின் வாயிலாக பிரச்சாரமும் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில், தமிழ்நாடு முதல்வரும் திமுகவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம் எல் ஏ மற்றும் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் ஆகியோரின் ஆலோசனையின் படி, வலங்கைமான் திமுக நகர செயலாளர் பா. சிவனேசன் தலைமையில், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், எஸ். ஆர். ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை செய்தார்கள்.

தொடர்ந்து வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம் எதிர்ப்புறம், தமிழ்நாடு முதலமைச்சரின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக எல் இ டி திரையின் வாயிலாக பிரச்சாரமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வலங்கைமான் நகர செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், எஸ். ஆர். ராஜேஷ்,கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றியம் ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய இடங்களில் கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக எல் இ டி திரையின் வாயிலாக பிரச்சாரமும் நடைபெற்றது. தொடர்ந்து வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில் ஆவூர், கோவிந்தகுடி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக எல் இ டி திரையின் வாயிலாக பிரச்சாரமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *