பாரதிய கிசான் சங்கதன் புதுச்சேரி மாநில பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நடந்தது

இதில் தேசிய பொதுச்செயலாளர் எர்ரம் வெங்கட ரெட்டி புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் வீரப்பன் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப வீரன் மாநில பொதுச்செயலாளர் முருகன் மற்றும் குமார் ரெட்டி துணைபு பொதுச் செயலாளர் ராஜசுந்தரம் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் மாநில ஊடகப்பிரிவு தலைவர் ரமேஷ் நாகா மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஐயப்பன் மோகன் ராஜி உள்ளிட்டோர்களை நியமனம் மற்றும் அறிமுகம் செய்து வைத்த பின்

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கப்பட்டது இதில் விவசாய நிலங்களில் மின் மீட்டர்களை பொருத்தக் கூடாது 100% இலவச மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் இயற்கை சீற்றத்தால் பயிர்களை இழந்தவர்களுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *