பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குறைக்கும் வகையில் புதுவை மாநிலத்தில் முதன்முறையாக தோழியர் பாலின மன்றம் எனும் மகிற்கான குறை தீர்ப்பு அமைப்புகள் புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக அரியாங்குப்பம் வில்லியனூர் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மகளிர் சுய உதவி குழுக்களின் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இத்தோழியர் பாலின மன்றங்களில் அந்தந்த கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலின தோழியர்கள் சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் காவல்துறை வருவாய்த்துறை மருத்துவத்துறை கல்வித்துறை சமூக நலத்துறை அதிகாரிகள் சட்ட வல்லுநர்கள் ஆகியோர்கள் அங்கத்தினர்களாக இருந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்

இதன் தொடர்ச்சியாக அறியாங்குப்பம் வட்ட வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் நெட்டப்பாக்கம் உட்பட்ட 13 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் கரியமாணிக்கம் அரசு கரும்பு உழவியல் ஆராய்ச்சி பண்ணையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

இந்த ஊர்வலத்தை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி துறை அதிகாரி கார்த்திகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்குபெற்ற பெண்கள் பதாகைகளை ஏந்தி பாலின விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கரியமாணிக்கம் மதடிப்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தது. அங்கு அரியாங்குப்பம் பட்டா வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் தலைமையில் பெண்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடந்த கருத்தரங்கில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்த கருத்தரங்கில் அரியாங்குப்பம் பட்டா வளர்ச்சி அதிகாரி கார்த்திகேயன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக நெட்டப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் முகந்தி, பல் மருத்துவர் ஹெலன், சூரமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர் அனிதா, நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் கீர்த்திவர்மன் ஆகியோர் விழிப்புணர்வு உரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், வட்டார விரிவாக்க அதிகாரிகள் கார்த்திகேயன், வெங்கடபாரதி வட்டார இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி கிராம சேவக்குகள், திட்டப் பணியாளர்கள் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்புகளின் சமூக வல்லுநர்கள் கணக்காளர்கள் நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள் என 350 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *