புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி நகராட்சி, வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கம் வார்டில் பிள்ளையார் கோவில் முதல் மார்க்கெட் வரையில் ஒரு புறமும், மார்க்கெட்டிலிருந்து அருணாச்சலா ஹோட்டல் வரை இருபுறமும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைப் பிரிவு மூலம் ரூ. 98 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ‘யு’ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கொம்பாக்கத்தில் நடந்தது.


இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய ‘யு’ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் பொறிஞர் பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர் ஜெயராஜ், இளநிலைப் பொறியாளர் மனோகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஜெகன்மோகன், கந்தசாமி, தேவநாதன், செங்கேணி, வேலு படையாட்சி, ஜனா, பரதன், பச்சையப்பான், முருகையன், துர்கா நகர் ரமேஷ், தேசிகன், சுரேஷ், ராமச்சந்திரன், ராஜேந்திரன், விக்னேஷ், பரமசிவம், சுரேஷ், வரதராஜன், சண்முகம், அருண், ஜெயகாந்தன், எத்திராஜ், அய்யனார், பாலதண்டாயுதம், ஜெயச்சந்திரன், பகிரதன், ரிச்சர்ட், கௌதம்,, ராஜேஷ், பெளீஸ் பிரகாசம், பிரபாகரன், சேகர், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், மதிமுக மாநில அமைப்பாளர் கபிரியேல், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் ராமதாஸ், கோபி, ஹரிகிருஷ்ணன், ராஜி, சபரிநாதன், அங்காளன், தங்கராசு, வேதாச்சலம், அமலோர் ஆசிரியர், செல்வநாயகம், மிலிட்டரி முருகன், அருள்மணி, சேகர், திலகர், லூர்துநாதன், முத்து, கோதண்டம், அன்பு, கோவிந்தராஜ், நடராஜன், ரவி, கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *