புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி ஆர்த்தியை வன்புணர்வுக்கு ஆட்படுத்தி கொலை செய்த சம்பவம் புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து புதுவை நகரம் முழுவதும் ஆங்காங்கே இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு முக்கிய சந்திப்புகளில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இனியும் புதுவைவில் ஏற்படாமல் இருக்க புதுவை அரசும் காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முன்வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே குற்றங்களை தடுக்க முடியும் குறைக்க முடியும். இறந்து போன ஆர்த்தியின் குடும்பத்தாருக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வழங்க வேண்டும்.தாயுள்ளம் கொண்ட புதுவை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும், புதுவை முதல்வர் ஐயா ரங்கசாமி அவர்களும் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத் துணைத் தலைவர் முருகவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *