முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான, காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA. அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் நகர், 24 வது வார்டு இராமானுஜம் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியருக்கு இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் S.ரமேஸ் கண்ணா அவர்களின் ஏற்பாட்டில், புதிய ஆடைகள், மதிய உணவு, கல்விக்கான உபகரணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா A.N. ரகு, மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் K.சம்பத் ராஜா MC, இராமநாதபுரம் தெற்கு நகர் செயலாளர் T.R.பிரவீன் தங்கம், வடக்கு நகர் செயலாளர் R.K.கார்மேகம், இராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் K.T.பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா அஹமது தம்பி, வார்டு நிர்வாகிகள் திரு திரு காளிமுத்து, ஜெகநாதன், திரு சித்தன், நகர் இளைஞரணி ஓவியர் சதீஷ், ஜெய சற்குரு, மணிகண்டன், ஜி.பி.உதய மூர்த்தி மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *