மதுரையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குமான இலவச கண் பரிசோதனை முகாமினை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் காவல் ஆணையர் லோகநாதன் துவக்கி வைத்தார்.
காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) மங்களேஸ்வரன் உடன் இருந்தார். வாசன் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் கீதா சிறப்புரை யாற்றினார்.
இதில் காவலர்கள் மற்றும் குடும்பத்தினர்,
அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் இலவச கண் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர்.