பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அருள்மிகு தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி ஆலயத்தின், மகாசிவராத்திரி பெருவிழா..
இசை நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வர சுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணபாரதி, சுபத்ரா ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை இன்னிசை, பரதநாட்டியம் நடனநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை திருக்கயிலை சிவ பூதகண திருக்கூட்டம் மற்றும் அய்யம்பேட்டை கிராமவாசியில் செய்திருந்தனர்.