திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம். தமிழகத்தில் மார்ச் எட்டாம் தேதி சர்வதேச உலக மகளிர் தினம் கொண்டாடி வருகின்றனர் மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் தனியார் மற்றும் அரசு சார்ந்த பல்வேறு துறைகளின் பணியாற்றும் பெண் பணியாளர்கள் சர்வதேச மகளிர் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் ஒன்று ஒரே விதமான புத்தாடை அணிவது ஒருவருக்கு ஒருவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்
திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம் திருவாரூர் நகருக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் ஹோட்டல் செல்வி சீன் கருத்தரங்க கூட்ட அரங்கில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
நிகழ்விற்கு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல. இணை பதிவாளர் சித்ரா தலைமை வகித்தார். நிகழ்வின் தொடக்கத்தில் சக பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர்
நிகழ்வில் தலைமையேற்று பேசிய மண்டல இணைப்பதிவாளர் சித்ரா பேசுகையில்
மகளிர் தினத்தின் பெருமைகளையும் பெண்ணாக தான் துறையை தேர்ந்தெடுத்து திறம்பட பணிபுரிந்து வருகிறேன் என்றார்