திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில், மாநிலத்தில் எங்கும் நடைபெறாத வகையில் பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா கடந்த 7 ஆம் தேதி பூச் சொறிதல் விழா உடன் துவங்கியது. 10 ஆம் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மார்ச் 17 ஆம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான பாடை க்காவடி திருவிழா வரும் 24 ஆம் தேதி, 31 ஆம் தேதிபுஷ்ப பல்லாக்கு விழா, ஏப்ரல் 7 ஆம் தேதி பங்குனி கடை ஞாயிறு திருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் தாசில்தார் அலுவலகத்தில், திருவிழா முன் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டம் தாசில்தார் ரஷ்யா பேகம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா சிவனேசன், கோயில் செயல் அலுவலர் ஆ. ரமேஷ்,மண்டல துணை தாசில்தார் ஆனந்த், பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, வலங்கைமான் போலீசிஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, மாரியம்மன் கோயில் தற்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடுதலாக குடி தண்ணீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறை வசதி செய்து தர வேண்டும். தீயணைப்பு ஊர்தி ஒன்றை நிறுத்தி வைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். விழா காலங்களில் மின் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்த வேண்டும். பாபநாசம்,கும்பகோணம், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். கோயில் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்த பகுதிகளில் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்ற நடவடிக்கைகளை தவிர்க்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தகர் சங்கத்தின் சார்பில் திருவிழா மற்றும் புஷ்ப பல்லாக்கு காலங்களில் இரவு 12 மணி வரை கடைகளை திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் சார்பில் திருவிழா மற்றும் புஷ்ப பல்லாக்கு காலங்களில், வலங்கைமான் மற்றும் தொழுவூர் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையை தற்காலிகமாக மூடி விடவும், வலங்கைமான்- பாபநாசம் சாலையில் வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது

உள்ளதை விழா காலத்திற்கு முன்னதாக சரி செய்து விடவும், முன்னதாக குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலை சரி செய்து விடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. முன்னேற்பாடுகள் கூட்டத்தில் திமுக நகர செயலாளர் பா. சிவனேசன், போக்குவரத்து துறை சார்பில் துரைமுருகன், நெடுஞ்சாலைத்துறை சார்பில்சாலை ஆய்வாளர் விஜயன், தீயணைப்புத்துறை சார்பில் நிலைய அலுவலர் மார்த்தாண்ட பூபதி, சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி, மின்வாரியம் சார்பில் போர்மேன் வாசு, மாரியம்மன் கோவில் அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் விக்னேஷ், கிராம நிர்வாக அலுவலர் வடிவேல், வர்த்தகர் சங்க தலைவர் கே.குணசேகரன், பொருளாளர் எஸ். புகழேந்தி மற்றும் பேரூராட்சிவார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட வளரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *