மதுரை மாவட்டம் பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக நேற்று 17 ஆம் தேதி இரவு பத்ரகாளியம்மனுக்கு சாட்டுதல் நிகழ்வும் காப்பு கட்டுதலும் நடைபெற்றது. முன்னதாக பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து கமிட்டி நிர்வாகிகள் பூசாரி அழைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பழத்தட்டுடன் ஊர்வலம் சென்றனர் தொடர்ந்து மாரியம்மனுக்கு கொடியேற்றுதல் நடைபெற்றது . தொடர்ந்து மங்கல இசை முழங்க முளைப்பாரி தண்ணீர் செம்பு ஊர்வலம் மற்றும் பத்ரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் சன்னதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனைகள் நடைபெற்றது. திருவிழா நிகழ்வுகள் நேற்று 17ஆம் தேதி முதல் வரும் 26 ஆம் தேதி வரைதொடர்ந்து
நடைபெற உள்ளது.
திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.