தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்டத்திற்கு ட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் சார்பில் மகளிர் தின விழா
வெகு விமர்சையாக
நடைப்பெற்றது.
ஆலங்குளம் மகளிர் காவல் ஆய்வாளர் உமாதேவி தலைமை தாங்கினார் துத்துக்குடி காவல் ஆய்வாளர்
சுதந்திரா தேவி,தென்காசி காவல் ஆய்வாளர்
லட்சுமிபிரபா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாவூர்சத்திரம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்
செந்தில் ராணி, அனைவரையும் வரவேற்று பேசினார்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுரேஷ் குமார்,ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் ஜெயராஜ்,பர்ணபாஸ்,முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராஜ்,ஆலங்குளம் காவல் ஆய்வாளர் மாதவன்,
ஊத்துமலை காவல் ஆய்வாளர்
செந்தில் மாறன்,ஊத்துமலை உதவி காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு
பெண் காவலர்களை வாழ்த்தி பேசினார்கள்.
இந்த விழாவில்ஆழ்வாகுறிச்சி உதவி காவல் ஆய்வாளர் தேவி, தென்காசி உதவி காவல் ஆய்வாளர்
தேவபிரியா மற்றும் ஆலங்குளம் காவல் உட்கோட்டத்திற் குட்பட்ட ஆலங்குளம்,சுரண்டை ,வீகே புதூர், ஊத்துமலை ,ஆழ்வார்குறிச்சி , கடையம், பாவூர்சத்திரம்
மற்றும் ஆலங்குளம் மகளிர் காவல்
நிலையம் உட்பட்ட காவல்நிலை யங்களில் பணிபுரியும் பெண் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி பெண் ஆய்வாளர்கள்,
காவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர் மகளிர் தினத்தை கொண்டாடினார்கள் .
இவ் விழாவில் பெண் காவலர்களின் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் நெல்லை எஸ் ஜி ரகுராம் வழங்கும் ஸ்ரீ ராகம் திரைப்பட மெல்லிசை குழு கலைஞர்களின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.