சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொது அறிவை வளர்க்கும் வகையில் நூலக களப்பயணம் சென்றனர். மாணவ,மாணவியர் பொது நூலகத்திற்க்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள் தேவகோட்டையில் உள்ள பொது நூலகம் சென்றனர்.நூலகர் வைத்தீஸ்வரன் மாணவர்களுக்கு நூலகத்தின் பல்வேறு பகுதிகளை அறிமுகம் செய்தார் .

                        நூலக உறுப்பினர் அட்டை பெறுவது எப்படி என்பதையும் விளக்கினார்.தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது.

                    நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன .இதனை மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார்.மாணவர்கள் இளம் வயதில் வாசிப்பு திறனை அதிகரித்து பொது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும்.

                         செல்போன்,தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து மாணவர்கள் அதிகம் நூலகத்திற்கு வந்து புத்தகங்களை படித்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

                             பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர்  மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார் . நூலக தினக்கூலி பணியாளர்கள் சுரேஷ் காந்தி , மீனாள் ஆகியோர் நூலக புத்தகங்கள் பயன்பாடு குறித்தும் விளக்கினார்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *