மதுரையில் ஜிபிஎஸ் கருவி மூலம்
பறக்கும் படை வாகனங்கள் தீவிர கண்காணிப்பு…..

மதுரையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் தலா மூன்று பறக்கும் படை கண் காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த சட்டமன்ற, மக்களவை தேர்தல்களிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படை செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன் இக்கருவி பொருத்தும் பணி தொடங்கி தற்போது அனைத்து வாகனங்களும் ஜபிஎஸ் கருவியுடனேயே பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது.

மக்களவை தேர்தலையொட்டி மதுரை மாவட்டத்தில் பறக்கும்படை செல்லும் வாகனங்களில், ஜபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பணப்பட்டு வாடா செய்யப்படுவதை தடுக்க மதுரை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன பரிசோதனை நடந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாடாளுமன்ற தொகுதியில் மாவட்டத்தில் மட் டும் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழ வந்தான், மேலூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.19ல் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இதற்கான அறிவிப்பு மார்ச் 16 ல் வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகளில் வாகன பரிசோதனையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது, தேர்தலுக்கான பணிகளை படிப்படியாக செய்து வருகிறோம். தற்போது பயன் படுத்தப்படும் பறக்கும்படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கும்ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனம் எங்கு செல்கிறது, எங்கு நீண்ட நேரமாக நிற்கிறது.

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதால், பறக்கும்படை வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இத னால் தவறுகள் கட்டுப்படுத்தப்படும்.
புகார்கள் கூறப்படும் பகுதிக்கு செல்கிறார்களா? என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே அறிய முடியும். இதனால் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க முடியும். பறக்கும் படை அலுவலர்களும் தங்களது பணியில் முழுமையான கவனம் செலுத்தும் நிலை ஏற்படும் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *