கோவை

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் – நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திய தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனம்….

கோவையை மையமாக கொண்டுள்ள தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனம்.புதுமையான பசுமை தீர்வுகள் மற்றும் நிலையான தயாரிப்புகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.வணிகங்கள் மற்றும் தனி நபர்கள் தங்கள் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க உதவுகின்றன அனைவருக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாக இந்த நிறுவனம் கொண்டுள்ளது.

இதனிடைய கோவையை சேர்ந்த சிவா சூரியன் என்ற இளைஞர் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்ய உள்ளார்.

இவரை ஊக்கப்படுத்தும் விதமாக தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனத்தின் சார்பாக தலைமை செயல் அதிகாரி பொன்சனா சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளும் சிவ சூரியனுக்கு நிதியுதவி வழங்கி பெருமைப்படுத்தினார். தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனத்தினர் கேட்டுக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *