சோழவந்தான்

சோழவந்தான் அருகே நாகமலையோர தோட்டத்தில் நெல் பயிர்களை பாதுகாக்க அனுமதி இன்றி அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி ஆட்டு மந்தை மேய்பாளர் பலியான சம்பவத்தால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். வீரபாண்டி.50.இவர் தனக்கு சொந்தமான 100க்கு மேற்ப்பட்ட செம்மேறி ஆடூகளை மதுரை மாவட்டம் மன்னாடிமங்கலம் தாமோதரன்பட்டியை சேர்ந்த தவமணி என்பவர் தோ.டத்தில் தங்கி கிடை அமர்த்தி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை ஆடுகளுக்கு தீவண இலை பறிக்க சென்றபோது.நாகமலை அடிவாரத்தில் உள்ள அய்யப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்திராமலிங்கம் என்பவர் தோட்டத்தில்நெல் பயிர்களை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகா.க்க அனுமதி இன்றி அமைத்திருந்த மின் வேலியில் சிச்கி பரிதாபமாக உயிழந்து உள்ளார்.

இச்சம்பவம் குறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை சப் இன்ஸ்பெக்டர் ராசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரபாண்டி 50.உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.. இச்சம்பவத்தால் இப்பகுதி வாழ் மக்கள் அதிர்ச்சி யடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *