தென்காசி மாவட்டத்தில் கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்திட தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களை நியமனம் செய்து, அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களாக கல்லூரி மாணவிகள் அபிதா பெல்சியா (காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுரண்டை) சன்மதி (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஆலங்குளம்), பேச்சியம்மாள் (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடையநல்லூர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கமல் கிஷோர் ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியியல் மகளிர் திட்ட இயக்குநர்
மதி இந்திரா பிரியதர்ஷினி, உதவி திட்ட அலுவலர் பிரபாகர் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இத்தூதுவர்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 31 கல்லூரிகளுக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *