திருவள்ளூர்

பொன்னேரி மீன்வளக்கல்லூரி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பு குறி த்து பொதுமக்களுக்கு நாடகம் முலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட வேண்பாக்கம் பகுதியில் டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

இக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் கல்லூரி டீன் ஆர்.ஜெய் ஷக்கிலா, துறை பேரா சிரியர் டாக்டர் என் மௌலிதரன், மற்றும் கல்லூரி மாணவ மாணவி கள் சார்பில் பொன்னேரி திருவெ ற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 18 வய து நிரம்பியவர்கள் 100% வாக்களிப் பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் நாடகம் நடத்தி காட்டினர்.

இந்த விழிப்புணர்வு நாடகமானது மீனவ மக்களுக்கும், இல்லத்தரசிக ளுக்கும், நடைபாதை வியாபாரிக ளுக்கும், மற்றும் சிறு வியாபாரிக ளுக்கும் உள்ளிட்ட பலதரப்பினரு க்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த 100 சதவீதம் தேர்தலில் வாக்களிப்பது குறித்து நடந்த விழிப்புணர்வு பொதுமக்க ளிடையே பெரும் வரவேற்பு பெற் றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *