காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேடந்தாங்கல், வெள்ளபுத்தூர், பெரும்பாக்கம், கூடலூர், எல். எண்டத்தூர், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திறந்த வெளி வாகனத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ராஜசேகர்,தம் கட்சியினருடன் ஜீப்பில் சென்று தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக பிரச்சாரம் மேற்கொண்ட
எல்.எண்டத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் யமுனா குப்புசாமி ஏற்பாட்டில் பெரும்பாக்கம் ராஜசேகர் சால்வை மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விவேகானந்தன், தேமுதிக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன், உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கிளை செயலாளர் ஆர்.குப்புசாமி, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.சுதாகர்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி,கழக நிர்வாகிகள் சோழன் ஆர்.ரூபன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.