உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது…
உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம், சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது இதில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து கூழ் மற்றும் கஞ்சிக் குடங்களுடன் மேளதாள முழங்க ஊர்வலமாகக் கொண்டு வந்து கூத்தாண்டவர் கோவில் அருகில் உள்ள அம்மன் கோவிலில் வைத்து மாவிளக்கு ஏற்றி படையில் இட்டு பொது மக்களுக்கு கூழ், கஞ்சிகளை வழங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் 18 நாட்கள் நடக்கும் இந்த சித்திரை திருவிழாவில் 23.4.2024 அன்று முக்கிய நிகழ்வான சாமி திருக்கண் திறத்தல் மற்றும் தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அடுத்த நாள் 25.4.2024 திருத்தேரோட்டம் நடைபெறும் இதனைத் தொடர்ந்து 26.4.2024 ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.