ரமலான் நல்வாழ்த்துக்கள்…….

   சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் வாழ்த்து......        



            ஈகைப் பெருநாள் 

சமூக உறவுகளுக்கான பாலம்..

ஈகையும் கருணையும் சமூகத்தில் வளரட்டும்……

ஈகைப் பெருநாள் சமூக உறவை பலப்படுத்திட வழிவகுக்கும் திருநாளாகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பு வறியவர்களும் மகிழ்ச்சியாக பெருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஃபித்ரா என்ற தருமத்தை கட்டாயம் அளித்து விட்டு பெருநாள் தொழுகைக்கு செல்ல வேண்டுமென இஸ்லாம் பணிக்கின்றது.

ஒரு மாதம் பசித்திருந்து தாகித்திருந்து ரமலான் மாதத்தில் பெற்ற பயிற்சிகள் ஆண்டு முழுவதும் தொடர வேண்டும். ஈகைப் பெருநாளின் பின்புலம் ஈகைமிக்க அறப்பணிகள் ஆற்றுவதில் தான் அமைந்துள்ளது.

தொழுகை, நோன்பு, ஹஜ் எவ்வாறு கட்டாய கடமையாக இருக்கின்றதோ அதே நிலையிலான கடமையாகவே ஜகாத் என்னும் தர்மம் அமைந்துள்ளது..

மனிதநேயப் பணிகளில் ஈடுபடுவது இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுத் தரும் செயலாகவும், பாவங்களை அழிக்கும் அறமாகவும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் வழியாகவும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடன் வாழும் சக மனிதர்களுக்குச் செய்யும் அறத்தொண்டுகள் இறைவனின் கருணையைப் பெற்றுத் தந்து அதன் மூலம் சுவனத்தையும் வசமாக்கும் வல்லமை அளித்திடும். இது அறப்பணிகள் செய்திட முனையும் முஸ்லிம்களுக்குப் பெரும் உந்துதலாகவும் அமைகிறது.

செல்வந்தர்கள், வறியவர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்து முஸ்லிம்களும் மனித நேயப் பணிகளில் ஈடுபடுவதை இஸ்லாம் ஒரு மார்க்கக் கடமையாக்கியுள்ளதற்குச் சான்றாகத் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் பல உள்ளன.

நபிகளார் கூறினார்கள்: ‘’மனிதகுலம் முழுவதும் அல்லாஹ்வின் குடும்பமாகும். மனிதகுலத்திற்கு அதிக நன்மை செய்பவர்தான் அல்லாஹ்விடத்தில் அதிக அன்பிற்குரியவராவார்’’
ஆக ஒரு முஸ்லிமானவர் சக மனிதனைத் தனது உறவுக்காரர், தனது கொள்கையுடையவர், பக்கத்து வீட்டுக்காரர்,ஊர்க்காரர் என்ற குறுகிய வட்டத்திற்குள் நிறுத்திப் பார்க்காமல் அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு இந்த நபிமொழிகள் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிமல்லாத மக்களும் சேவைகளை பெறுவதற்கு தகுதியானவர்களே என்பதை மேலே விவரித்த நபிமொழிகள் சந்தேகமற எடுத்துக் காட்டுகின்றன.

எனவே புனித ரமலான் மாதத்தில் நம்மிடம் காணப்பட்ட ஈகைக் குணம் ஆண்டு முழுவதும் தொடர இந்நன்னாளில் உறுதி எடுப்போமாக.
வெறுப்புணர்வு நெருப்பை அணைக்க அனைவரையும் அரவணைப்போம் என இந்த நன்னாளில் உறுதி எடுப்போம்எடுப்போம் என்று சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *