கடும் வெயிலில் உடலின் வெப்பத்தை போக்க நுங்கு வெட்டி கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர்.

காரனை மண்டபம் பேருந்து நிறுத்தும் இடத்தில் பனை நுங்கு விற்பனை செய்து வரும் வியாபாரியிடம் வேட்பாளர் ராஜசேகர் பொது மக்களுக்கும் மற்றும் பிரச்சாரத்திற்கு வருகை தந்த மக்களுக்கு கடும் வெயிலில் உடலின் வெப்பத்தை போக்க பனை நுங்கு வெட்டி கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் பொதுமக்கள் இடையே பேசுகையில் அதிமுக சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெற்றால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை நம்பர் ஒன் நாடாளுமன்ற தொகுதியாக மாற்றி அமைப்பேன் என பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்து வாக்கு சேகரித்தார்.

உடன் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம்,அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,ஒன்றிய கழக செயலாளர்கள் தருமன், பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம்,பேரூராட்சி கழக செயலாளர் ஜெய விஷ்ணு, காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி, துணை செயலாளர் விமல் ராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் புதுப்பாக்கம் பிரபு உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *