தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகருக்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு நகரின் பிரதான பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் பழைய பேருந்து நிலையம் வ உ சி சிலை அருகே 20 வது பகுதி சார்பாக இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
திமுக நகரச் செயலாளர் புருசோத்தமன் போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும் போடி நகராட்சி நகரமன்ற உறுப்பினருமான சங்கர் மற்றும் திமுக கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய வார்டு பகுதி திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.