தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்த பாமக நிறுவனர்
அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கரின் உருவ சிலை பாமக கட்சியினரால் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் உருவச் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அம்பேத்கரின் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநில செயலாளர் கருணாநிதி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்டத் தலைவர் பாவாடைராயன்,மாவட்டத் துணைச் செயலாளர் சலவாதி சேகர், திண்டிவனம் நகர செயலாளர் பூதேரி ராஜேஷ் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், சுதாகர் மணிகண்டன் கோபால், ரகு உட்பட பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராஜ் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.