விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சரகத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் சந்திரசேகர் என்பவர் தனது வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 48 பவுன் தங்க நகையையும், ரூ.60,000- பணத்தையும் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக கொடுத்த புகார் செய்தார்.

ராஜபாளையம் தெற்கு ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் குற்ற பிரிவு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ராஜபாளையம் தெற்கு போலீஸ் சார் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் அழகேசன் மேற்பார்வையில், தெற்கு காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையில், குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்திகுமார், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் இளங்கோவன், பாலகுமார்,முதல் நிலை காவலர் கணேசன், நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துகண்டியார், தலைமை காவலர் காளிதாஸ் ,முதல் நிலைக் காவலர்கள் சந்தோஷ் ,பாலாஜி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

சிசிடிவி கேமராக்களின் உதவியோடு குற்றவாளியை அடையாளம் கண்டு வெம்பக்கோட்டை சுப்பையா மகன் கணேசன் , துவரங்குறிச்சி காவல்காரன்பட்டி பிச்சையா மகன் முத்துச்சாமி ஆகியோரை பிடித்து விசாரிக்க, தாங்கள் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டனர்.

மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த திருட்டு நகைகளையும் பணத்தையும் கைப்பற்றி ராஜபாளையம் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு உடனுக்குடன் தகவல் பெற்றுத் தந்த விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் தமிழழகனுக்கு ராஜபாளையம் குற்றப்பிரிவு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *