சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சீர்காழி- திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி அருகே வடகால், நடுத்தெரு, முருகன் கோயில் தெரு, மேல தெரு உள்ளிட்ட பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த ஒரு மாத காலங்களாக சரியான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் நிலத்தடி நீர் காவி நிறமாக வருவதாகவும் இதனால் சமைப்பதற்கு கூட முடியாமல் தவித்து வருவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக முற்றிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனிடையே ஆத்திரமடைந்த கிராம மக்கள் சீர்காழி – திருமுல்லைவாசல் இடையே வடகால் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சீர்காழி- திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து அதிகாரி யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் சமைத்து சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டனர் அப்பொழுது அதிகாரிகள் வந்து எங்களிடம் உத்திரவாதம் அளித்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என கூறினர்.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சந்தானம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *