வால்பாறையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை சட்டமன்ற தொகுதி மேற்பகுதியில் உள்ள சுமார் 68 வாக்கு மையங்களுக்கான வாக்களிக்கும் இயந்திரங்கள் காவல் துறையினரின் முழு பாதுகாப்புடன் அந்தந்த மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இது பற்றி தேர்தல் அதிகாரி வாசு தேவன் கூறும்போது வாக்கு மையங்களில் வாக்காளர்களின் வசதிகளுக்காக குடிநீர்வசதி, பாத்ரூம் வசதி, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்கு இயந்திரங்கள் ஒருவேளை பழுதானால் அதற்கான மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் சுமார் 1 லட்சத்து 97 ஆயிரத்து 950 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 127 பேர்களும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 800 பேர்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர்களும் உள்ளனர் என்றும் 324 பணியாளர்கள் வாக்கு மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் துணை ராணுவம் மற்றும் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வால்பாறை மேல்பகுதியில் வனவிலங்குகளால் ஏதேனும் அச்சுறுத்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படும் ஷேக்கல்முடி, மானாம்பள்ளி,சக்தி, ஹைபாரஸ்ட் உள்ளிட்ட நான்கு வாக்கு சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வும் எனவே தேர்தல் நாளான நாளை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *