ராஜபாளையத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் போக்சோ வழக்கில் கைது
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும். சிங்க ராஜாக்கோட்டை பகுதியை சேர்ந்த வைரஜோதி மகன் சூர்யா (வயது 22) என்ற வாலிபருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது
அடிக்கடி அந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வந்துள்ளார் வீட்டின் மாடிக்கு சென்று நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகளின் செல்போனை எடுத்து பார்த்தபோது வாலி பருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அதிர்ச்சி யடைந்த அவர்கள் உடனே மகளையும், அந்த நம்பரில் போன் செய்து அந்த வாலி பரையும் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் மாணவியின் வீட்டின் மொட்டை மாடியில் வாலிபருடன் மாணவி இருந்ததை மாணவியின் தாயார் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் இதை பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார் இதுகுறித்து பெற்றோர் ராஜபாளை யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசை வார்த்தை கூறி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்