சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில்
தண்ணீர்திறப்பு…

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக வைகை அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து
ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 59 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. வருகிற ஏப்ரல் 23ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார் கள். இதனை முன்னிட்டு வைகை அணையில் இருந்து நேற்று பகல் தண்ணீர் திறக்கப் பட்டது.

வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன், மதகு களை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். பிற்பகலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் வேகமாக மதுரை மாநகரை சென்றடையும் என்று பொதுப்பணித்துறை யினர் தெரிவித்தனர்.

முதல் இரண்டு நாட் கள் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்தடுத்த நாட்களில் தண்ணீர் திறக்கப்படும் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு 23ம் தேதி மாலை தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா விற்காக வைகை அணையில் இருந்து மொத் தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *