பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
காரைக்குடியில் இருந்து பாபநாசம் வழியாக காரைக்குடியில் இருந்து பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடை பயணமாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்..

பால், பிரட் மற்றும் பிஸ்கட் வழங்கி சிறப்பு செய்த கிராமவாசிகள்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலத்துறை பகுதியில் காரைக்குடி, மணப்பாறை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபநாசம் வழியாக நடைபயணமாக வைத்தீஸ்வரன் கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாபநாசம் பேரூராட்சியின் தலைவர் பூங்குழலி கபிலன் பால், பிரட் மற்றும் பிஸ்கட்களை வழங்கி நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், சரண்ராஜ், பேரூராட்சித் துணைத் தலைவர் பூபதி ராஜாமற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள், சமூகஆர்வலர்கள், ஆன்மீக பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பாலத்துறை கிராமவாசிகள் செய்திருந்தனர்.