நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கடந்த 19ஆம் தேதி லக்னோ அணியுடன் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து அடுத்த போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 39 ஆவது போட்டியானது நடைபெற உள்ளது இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோத இருப்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ருத்ராச் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது சென்னை விமான நிலையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் வெளியே வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்
தோனியை கண்டவுடன் ரசிகர்கள் சத்தத்தால் விமான நிலையமே அதிரத் தொடங்கியது சத்தம் அதிகரித்ததால் காதை கிழிக்கும் அளவில் சத்தமானது பெருக்கெடுத்தது
இதனை அடுத்து தோனியை பாதுகாப்பாக அழைத்து வந்து வாகனத்தில் ஏற்றிவிட்டனர் மேலும் தோனியை காண்பதற்காகவும் அவருடன் செல்பி எடுப்பதற்காகவும் குவிந்த ரசிகர்கள் கூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து வாகனத்தில் ஏறிய தோனி ஜன்னலோரம் அமர்ந்ததை அடுத்து அவருடன் பேசவும் செல்பி எடுப்பதற்காகவும் முயற்சி செய்த ரசிகர்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து பகுதிக்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் மேலும் விமான நிலையத்தில் இருந்து வாகன மூலம் புறப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது ரசிகர்கள் கூட்டத்தாலும் ரசிகர்கள் சத்தத்தாலும் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.