சென்னை மாதவரம் கொல்கத்தா ஷாப் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாககன்னிகா பரமேஸ்வரி பாலசித்தர் பீடம் திருக்கோயில் கும்பாபிஷேகம் மகா கணபதி யாகத்துடன் துவங்கப்பட்டது.

இந்நிகழ்வை
தொடர்ந்து பல நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கோவில் அர்ச்சகர்கள் தலையில் ஏந்தி கோயிலை சுற்றி வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க மந்திரங்கள் ஓதி யானை கலசத்தின் மீது புனித நீரால் கும்பாபிஷேகம் நடத்தினர் .

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி குடும்பத்துடன் கலந்து கொண்டு நாககன்னிகா பரமேஸ்வரி அம்மனையும் பால சித்தர் பீரிடத்தையும் தரிசனம் செய்தார் பின்னர் கோவில் நிர்வாகிகளால் ஆளுநருக்கு கும்பமரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அங்கு கூடியிருந்த
அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் பக்தகோடிகள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்புடன் ஏற்பாடு செய்தனர்.

குளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்தரவில் புழல் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் மாதவரம் காவல் நிலைய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *