பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கோடைகால நீர் ,மோர் பந்தலை பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் வீ.ஜெகதீசன் திறந்து வைத்தார்.
கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர் ,மோர், வெள்ளரிக்காய், பழச்சாறு, இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொளக்காநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், இளைஞர் அணி துணைச் செயலாளர் சுப்பிரமணி, அயனாபுரம், இழந்தகுழி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.