12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது :-

இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். 

உங்களது வாழ்வில் இந்த வெற்றி பயணம் தொடரட்டும். இத்தகைய வெற்றிமுழக்கத்தோடு, வாழ்கையில் வீருநடை போட்டு, முன்னேறிச் செல்லுங்கள்!

மிக முக்கியமாக, நினைந்த மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் மற்றும் தோல்வியுற்றமாணவர்கள், இதனை நிரந்தர தோல்வியாகக் கருதாமல், உங்களது வெற்றி தாமதமாகிறது

என எண்ணி, மனம் தளராமல், அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த பயிற்சியில் ஈடுபட்டால்,
வெற்றி நிச்சயம். அதற்குப் பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். பிள்ளைகள் மனவுறுதி கொண்டு செயல்பட வைப்பது ஆசிரியர்களின் கடமையும் கூட.

இந்தத்தருணத்தில், மீண்டும் ஒருமுறை அனைத்து தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகளுக்கும், அவர்களை உருவாக்கிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களும், மனதார பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *