செங்கோட்டைஅரசுமருத்துவ மனைக்கு மத்திய அரசு விருது செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ பாராட்டு

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அரசு பொது மருத்துவமனைக்கு மத்திய அரசின் காயகல்ப விருதுவழங்கப்பட்டுள்ள நிலையில் செங்கோட்டை அரசு மருத்துவ அலுவலர்களை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி நேரில் சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அரசு பொது மருத்துவமனை சிறப்பான மருத்துவ சேவையாற்றி வருகிறது. மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா் ராஜேஸ் கண்ணன் தலைமையில் டாக்டர்கள், செவிலியா்கள், பணியாளா்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றனா்.

இந்த மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை, எலும்பு, மூட்டு மருத்துவ அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்கைளும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுத்தம், சுகாதாரம், சுற்றப்புற துாய்மை நோய் பரவாத்தன்மை வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றிற்க்கான மத்திய அரசின் உயரிய விருதான காயகல்ப விருது பெற்றுள்ளது. காயகல்ப விருதில் தமிழக அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக ரூபாய் 10 லட்சம் பரிசும் கிடைத்துள்ளது.

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது பெற்றது என்ற தகவல் அறிந்த கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளருமான செ‌.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா
செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மத்திய அரசு விருது பெற்ற மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜேஸ்கண்ணன் மற்றும் டாக்டர்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மேலும் மருத்துவமனைக்கு அத்தியவசிய தேவைகள் குறித்து விபரங்கள் கேட்டறிந்தார். அதனை தொடா்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர அதிமுக செயலாளா் கணேசன், நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், முத்துப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் திலகா், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர்உசேன், நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளா் சக்திவேல், மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *