டாக்டர் அய்யாத்துரைப்பாண்டியர் பிறந்தநாள் விழா 6 இடங்களில் அன்னதானம், சங்கரன்கோவிலில் தங்கதேர் இழுத்து வழிபாடு

தென்காசி அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், ஏவிகே கல்வி குழும தலைவருமான அய்யாத்துரைப்பாண்டியரின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட் டத்தில் ஆறு இடங்களில் சிறப்பு அன்னதானம் பொது மக்களுக்கு வழங் கப்பட்டது. மேலும் சங்கரன்கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனையின் படி சங்கரன்கோவிலில் ஏ.ஏ.ஆர்.ராயல் ரெசி டென்சி முன்பும், வாசு தேவநல்லூரில் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பும், கடைய நல்லூரில் பேருந்து நிலை யம் முன்பும், வீராணத்தில் மேற்கு தான்தோன்றி அம் மன் கோவில் முன்பும், பண்பொழியில் சுந்தர ராஜ பெருமாள் கோவில் முன்பும், இலஞ்சியில் ஏ.ஏ.ஆர் ரிசார்ட்ஸ் முன் பும்என தென்காசி மாவட் டத்தில் ஆறு இடங்களில் சிறப்பு அன்னதானம் பொது மக்களுக்கு வழங் கப்பட்டது. மேலும் சுரண் டையில் அழகு பார்வதி அம்மன் கோவில் முன்பு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

பண்பொழி சுந்தரராஜ பெருமாள் கோவிலில் அய்யாதுரை பாண்டி யர் பெயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக் தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன மாலை யில் சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் சமேத சங்கரலிங்கப்பெருமாள் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் அய்யாத்துரைப் பாண்டியர் பெயரில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகளில் ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி பசும்பொன், பூலோகராஜ், சுபிக்ஷா கருப்பசாமி, பண் பொழி கவுன்சிலர் கணேசன், பேச்சிமுத்து, செல்வராஜ், ஆனந்த், அருணாச்சலம், ராஜேஸ், சிவசாமி, சிவகுமார், சுமதி, காஜா முகைதீன், தென்பொத்தை கவுன்சிலர் மாரி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *