திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய அன்னையர் தின விழா சாய் முதியோர் இல்லத்தில் மகிளா காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் கொண்டாடப்பட்டது.
இதில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்காலம்பா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையது, ஆகியோரின் அறிவுறுத்தல் படி
இந்திய அன்னையர் தினத்தை யொட்டி தமிழ்நாடு மகிளா
மாநில பொதுச் செயலாளர் மாலதி தலைமையில் ஸ்ரீ,சாய் முதியோர் இல்லத்தில் முதியோர்களுடன் கேக் வெட்டி அதனைத் தொடர்ந்து காலை உணவு வழங்கி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியினை திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தொடங்கி வைத்தார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முருகானந்தம், வட்டார தலைவர் முத்துக்குமார்,
அன்னையர்களை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இது குறித்து மாலதி தெரிவிக்கையில்:-
அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும். அன்னையர்கள் பல வித சவால்களைச் சந்தித்து அவை எல்லாம் எதிர்த்துப் போராடி சாதனை படைத்து வருகின்றனர்.
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என அவ்வையார் தனது நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனில் குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள் அன்னையர் தான் நாம் இவ்வுலகில் கண்ணால் காணும் முதல் தெய்வமாகும்.
அன்னை தான் இவ்வுலகில் நமக்கு கிடைத்த விலை மதிப்புள்ள உறவாகும். அன்னையர்கள் பல வித சவால்களைச் சந்தித்து அவை எல்லாம் எதிர்த்துப் போராடி சாதனை படைத்து வருகின்றனர்.இத்தகைய பெருமைக்கு உரிய அன்னையர்களுக்காகக் கொண்டாடப்படும் தினமே அன்னையர் தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 14-ந் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினமானது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. பெண்கள் ஒரு தாயாக, சகோதரியாக, தாரமாக, தோழியாக, இல்லத்தில் உள்ளவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக, வழி நடத்திச் செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ பாத்திரங்களை வகித்தாலும் அவர்களுக்கு அன்னை என்ற பாத்திரமே மிக உன்னதமான பாத்திரமாகும்.கருவிலேயே பல சவால்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி இந்த சமூகத்திற்கு குழந்தைகளைத் தருபவர்கள் அன்னையர்களே. எல்லா உறவுகளையும் ஒன்றிணைத்து தன்நலம் கருதாது வாழும் பெண் தெய்வங்களே அன்னையர்கள் ஆவர். அன்னையர் தினம் பழங்காலத்தில் பெண் கடவுள்களுக்கு வசந்த விழாவாக கொண்டாடப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
16-ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் தான் மதர்ஸ் சன்டே என்று முதன் முதலில் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் வாழ்ந்த மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் தாயன்பை அடியொட்டியே அன்னையர் தினம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. என இவ்வாறு அவர் தெரிவித்தார்.