சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் முத்து நாட்டு கண்மாயில் ஒருவரை அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளதாக தேவகோட்டை தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
இச்சம்பவம் குறித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சின்னகோடகுடியில் இருந்து பழைய தேர்போகி செல்லும் சாலையில் பூங்குடி ஏந்தலை அருகே முத்து நாட்டு கண்மாயில் கடந்த மார்ச் மாதம் தேவகோட்டை ஜீவாநகரை சேர்ந்த சேதுராஜன் மகன் பாண்டியராஜன் (38) அவரது நண்பர் பூங்குடித்தலை சேர்ந்த செல்வகுமார் மற்றும் ஐந்து நண்பர்களுடன் மது அருந்தி உள்ளனர்.
அப்பொழுது சின்னகோடகுடியைசேர்ந்த ராஜாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அது கைகலப்பாக மாறி கூட இருந்த நண்பர்கள் சேர்ந்து பாண்டியராஜனை அடித்து கொலை செய்து பாண்டியராஜன் கொண்டு வந்த டாட்டா வாகனத்தில் அவரைக் கொண்டு சென்று கண்மாயின் நடுப்பகுதியில் குழியை தோண்டி புதைத்தோம் என தெரிவித்தனர்.
நேற்று தேவகோட்டை தாசில்தார் அசோக்குமார் தலைமையில் டிஎஸ்பி பார்த்திபன் தடவியல் நிபுணர் சிவதுரை ஆகியோர் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர்
உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி சட்ட மருத்துவர் செந்தில்குமார் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தார் அதன் பின்னர் உடன் பாண்டியராஜன் தகப்பனார் மற்றும் சகோதரரிடம் ஒப்புதல் பெற்று அங்கேயே உடலை புதைத்தனர்.மேலும் 4 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி,தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள்,
வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இருந்தனர்.