திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் ஒன்றியம் , பக்கிரிபாளையம் ஊராட்சியில் உழவர் உரிமை இயக்கத்தின் 
“மேல்செங்கம் புதூர் கிளை” துவக்க விழா நடைபெற்றது .

நிகழ்விற்கு கிளைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் முன்னதாக தொழிலதிபர் சேகர் அனைவரையும் வரவேற்றார்.  

சிறப்பு அழைப்பாளராக உழவர் உரிமை இயக்கம் மாநில தலைவர்,எட்டு வழிச் சாலை எதிர்பபு இயக்க ஒருங்கிணைப் பாளருமான அருள் ஆறுமுகம் கலந்து கொண்டு பதாகையை திறந்து வைத்து சிறப்பு உரையாற்றினார்.  இந்த கிளை திறப்பு விழாவில் கீழ்கண்ட உறுதிமொழியை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.

உழவர் உரிமை இயக்கத்தின் உறுப்பினராகிய நான்..இந்திய அரசியலமைப்பு சட்டம்வழங்கியுள்ள உரிமையை பயன்படுத்தி என்னை போன்ற உழவர்களின் வாழ்க்கையை மேம்படுததவும், உழவுத் தொழிலை மற்ற தொழில்களை விட உயர்ந்ததாக மாற்றவும்.. 

உழவர்களின் உரிமையை மீட்கவும்,கட்சி, சாதி, மதம், ஆண் பெண் என்ற பாகுபாடுகளை கடந்து..உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன்,உழவர் உரிமை இயக்கத்தில் இனைந்து எந்த அச்சமுமின்றி உழவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பவும்..போராடவும் தயங்க மாட்டேன் என்றும்..வாரத்திற்கு ஒரு நாள் உழவர் உரிமை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் உறுதிமொழி ஏற்கிறேன்!

என்று உறுதிமொழி ஏற்றனர்

நிகழ்ச்சியில் உழவர் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள். மகாலிங்கம், உமா மகேஸ்வரன், சென்னன், வேல்முருகன்,சிவன், ராஜா மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உழவர் உரிமை இயக்கத்தின்”மேல்செங்கம் புதூர் கிளை” துவக்க விழா பிரம்மாண்டம் இல்லாமல் மிக சிறப்பாக நடைபெற்றது.

நேற்று 12-மே-2024 மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். இந்த கிளை திறப்பு விழாவில் கீழ்கண்ட உறுதிமொழியை அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.

உழவர் உரிமை இயக்கத்தின் உறுப்பினராகிய நான்..இந்திய அரசியலமைப்பு சட்டம்

வழங்கியுள்ள உரிமையை பயன்படுத்தி…என்னை போன்ற உழவர்களின் வாழ்க்கையை மேம்படுததவும்… உழவுத் தொழிலை மற்ற தொழில்களை விட உயர்ந்ததாக மாற்றவும்.. 

உழவர்களின் உரிமையை மீட்கவும்..கட்சி, சாதி, மதம், ஆண் பெண் என்ற பாகுபாடுகளை கடந்து..உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன்… 

உழவர் உரிமை இயக்கத்தில் இனைந்து…எந்த அச்சமுமின்றி உழவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பவும்..போராடவும் தயங்க மாட்டேன் என்றும்..

வாரத்திற்கு ஒரு நாள்..உழவர் உரிமை இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் ஏற்கிறேன்!

என்று உறுதியேற்று நிகழ்வு இனிதே நிறைவடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *