யாராக இருந்தாலும் வரம்பையும் மனித உரிமையை மீறக்கூடாது, காவல்துறை கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என தருமபுரியில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.