பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி, மே 17
தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் மழை யின் காரணமா பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி செங்கோட்டை குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக கடந்த 4 தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் மழை இல்லாத போதும் வெயிலும் அவ் வளவாக இல்லை. மாலையில் மேக கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடந்த வாரம் காணப்பட்ட வெயி லின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து இதமான சூழல் நிலவுகிறது.
இதனால் குற்றாலம் மெயின் அருவியில் சிறிதளவும் , பழைய குற்றால அருவியில் அதைவிட அதிகமாகவும் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியின் ஆண்கள் பகுதியில் ஓரமாக விழும் தண்ணீ ரில் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்துச் செல்கின்றனர்.
ஆனால் பழையகுற்றால அருவியில் தண்ணீர் அதிக அளவு விழுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து ஆனந்தமாய்க் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வருகிற 19ம்தேதி வரை தென்காசி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள் ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. எனவே குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் பழைய குற்றாலம் அருவி மட்டுமன்றி மெயின் அருவி ஐந்தருவி புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி குற்றாலத்தை நம்பி வாழும் வியாபாரிகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.