40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும் சந்திப்பு நிகழ்ச்சி பிரியாத பிரண்ட்ஸ் குரூப் முன்னாள் மாணவர்கள் ….
தேனி மாவட்டம் பெரியகுளம் வி.நி.அரசு. ஆண்கள். மேல் நிலைப் பள்ளியில் படித்த 1984 – 1991 முன்னாள் மாணவர்கள் யாதவர் சமுதாய கூடத்தில் முன்னால் ஆசிரியர்களும், முன்னால் மாணவர்களும் ஒன்று கூடிய நாள் ( சந்திப்பு நிகழ்ச்சி ) சிறப்பாக நடை பெற்றது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் M.N. முருகேசன் முன்னால் தலைமை ஆசிரியர், மு. ராஜ ரத்தினம் தமிழ் ஐயா , K. சாகுல் ஹமீது T. வைரவ சாமி வணிகவியல் ஆசிரியர், D. பால சுப்பிர மணியன் ஆங்கில ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் 200க்கு மேற்பட்ட வெளியூர், மற்றும் உள்ளூர் மாணவர்கள் கலந்து கொண்டு , தனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் T.ரவீந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.
கலந்து கொண்ட ஆசிரியர் பெருமக்களுக்கும், வருகை புரிந்த மாணவர்களுக்கும் இருவரும் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சி ஆக்கியது. மதிய உணவு வழங்கப் பட்டது.
பள்ளியின் பெயர் அடித்த துணிப் பையில் இனிப்பு மற்றும் கார வகைகள் வழங்கப் பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் நிகழ்ச்சி மனதை கவர்ந்துள்ளது.
இதன் சிறப்பு ஒருங்கிணைப்பு செய்த T. ரவீந்திரன் அவர்களுக்கு சிறப்பாகும். நிகழ்ச்சி முடிவில் வருகை புரிந்த அனைவருக்கும் நன்றிகள் பல கோடி கூறி சிறப்பு செய்தார்.