தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சாந்தி(54). இவர் அடைக்கல பட்டணத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் அலுவலகத்தில் வசூல் ஆகும் மின் கட்டண பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக நேற்று முன்தினம் (வியாழகிழமை ) ஆலங்குளம் நோக்கி தனது பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் கழுத்தில் அணிந்திருந்த -9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.
இது சம்பந்தமாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை விலக்கில் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் மற்றும் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது முன்னுக்கு பின்னாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரண்டை அருகே உள்ள குறிச்சான் பட்டியை சேர்ந்த ஆனந்த மகன் ஆகாஷ் (23) என்றும், தற்போது கோயமுத்தூரில் வசித்து வருவதாகவும் , கடந்த 2 தினங்களுக்கு முன்பு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.
அவனிடம் இருந்து 4 .5 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நகை பறிப்பில் ஈடுப்பட்ட கொள்ளையனை துரிதமாக செயல்பட்டு 48 மணி நேரத்தில் ஆலங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர்.